நடிகர் சிம்பு - ஜோதிகா நடிப்பில் வெளியான மன்மதன் படம் மீண்டும் டிஜிட்டல் முறையில் வெளியாகவிருக்கிறது.
நடிகர் சிம்பு நடித்திருந்த ரொமாண்டிக் த்ரில்லர் படமான் மன்மதன் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஜோதிகா ஹீரோயினாக நடித்திருந்த அந்தப் படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகர், மன்மதன் தனக்கு மிகவும் நெருக்கமான படம் என்று குறிப்பிட்டார்.
மன்மதன் படத்தில், கவுண்டமணி, சிந்து துலானி, அதுல் குல்கர்னி மற்றும் சந்தனம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசையும், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், அந்தோனியின் எடிட்டிங்கும் படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்திருந்தன.
தத்தை தத்தை, மன்மதனே நீ, என் ஆசை மைதிலியே மற்றும் காதல் வளர்த்தேன் போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாடல் வரிகளை கவிஞர்கள் வாலி, நா.முத்துகுமார், சினேகன், பா.விஜய் ஆகியோர் எழுதியிருந்தனர். சுவாரஸ்யமாக, மன்மதன் படத்தில் மந்திரா பேடி மற்றும் யானா குப்தா சிறப்பு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தற்போது மீண்டும் மன்மதன் திரையரங்குகளில் வெளியாவதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.