• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திருமணம் குறித்த கேள்விக்கு சிம்பு சொன்ன க்யூட் பதில்...!

திருமணம் குறித்த கேள்விக்கு சிம்பு சொன்ன க்யூட் பதில்...!

சிம்பு

சிம்பு

தி லூப் படத்தை (மாநாடு படத்தின் தெலுங்குப் பெயர் தி லூப்) மிகுந்த சிரமத்துக்கிடையில் எடுத்ததாகவும், அனைவரும் ஒத்துழைப்புடன் உழைத்ததாகவும் ஹைதராபாத் பத்திரிகையாளர் சந்திப்பில் சிம்பு தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாநாடு படத்தின் தெலுங்குப் பதிப்பின் புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற சிம்பு திருமணம் குறித்த செய்தியாளர்ககளின் கேள்விக்க சிரித்துக் கொண்டே மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.

சிம்பு நடித்தப் படங்கள் ஆரவாரமில்லாமல் வந்து போவதுதான் வாடிக்கை. மாறாக மாநாடு படத்துக்கு ரசிகர்களிடமும், திரைத்துறையினரிடமும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதை, டைம் லூப் திரைக்கதை, வெங்கட்பிரபுவின் இயக்கம் என பல காரணங்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு சிம்பு படம் ஒன்று தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. அதன் புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் சிம்பு.

தி லூப் படத்தை (மாநாடு படத்தின் தெலுங்குப் பெயர் தி லூப்) மிகுந்த சிரமத்துக்கிடையில் எடுத்ததாகவும், அனைவரும் ஒத்துழைப்புடன் உழைத்ததாகவும் ஹைதராபாத் பத்திரிகையாளர் சந்திப்பில் சிம்பு தெரிவித்தார்.

நேரடி தெலுங்குப் படம் செய்ய தயாராக இருப்பதாகவும், நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும் கூறினார். அடுத்து அவர் கூறிய தகவல் முக்கியமானது. இனிவரும் என்னுடைய படங்கள் தமிழ், தெலுங்கில் தயாராகும். இல்லாவிடில் தமிழில் வெளியாகும் போது தெலுங்கிலும் 'டப்' செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றார்.

Also read... அயலான் படத்தில் ஆச்சரியப்படுத்தும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்...!

இந்த சந்திப்பின் போது சிம்புவிடம் அவரது திருமணம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு சிறாத்துக் கொண்டே, நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க சார் என்று மழுப்பலாக பதிலளித்தார் சிம்பு.

அடுத்து நடிக்கும் கொரோனா குமாரில் கொரோனா பாதித்த முதல் பேஷண்டாக நடிப்பதாக சிம்பு தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: