ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரேக்கில் சிம்பு செய்யவிருக்கும் சிறப்பான சம்பவம்

பிரேக்கில் சிம்பு செய்யவிருக்கும் சிறப்பான சம்பவம்

சிம்பு

சிம்பு

சிலம்பரசனின் 'பத்து தலை' படப்பிடிப்பு முடிவடைந்தது, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சிம்பு தற்காப்பு கலைகளை கற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரங்களில் ஒருவர். தற்போது ஒபேலி என் கிருஷ்ணா இயக்கிய 'பத்து தலை' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சிம்பு தனது அடுத்தப் படத்தைப் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. அதே சமயம், முன்னதாக அறிவிக்கப்பட்ட அவரது 'கொரோனா குமார்' பற்றிய புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. இதற்கிடையே சிம்பு தனது அடுத்தப் படத்தை அறிவிப்பதற்கு முன்பு, ஒரு மாதம் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இந்த நேரத்தில் தனது திறமையை வளர்த்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே சிலம்பரசன் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக ஏஆர் முருகதாஸுடன் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிக பட்ஜெட் படமாக உருவாகும் இந்தப் படம் தொடங்க சில காலம் ஆகும் எனத் தெரிகிறது. சிலம்பரசனும், ஏ.ஆர்.முருகதாஸும் இரண்டு முறை சந்தித்துப் பேசி, படத்தின் ஏற்பாடுகளை செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதேசமயம், சிலம்பரசனின் அடுத்தப் பட அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

சிலம்பரசனின் 'பத்து தலை' படப்பிடிப்பு முடிவடைந்தது, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. இப்படம் மார்ச் மாதத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பத்து தல' படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், கன்னடப் படமான 'முப்தி' படத்தின் தமிழ் ரீமேக்கான படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண் சுதந்திரத்தை அனுபவிக்கணும்... பெரியார் சிந்தனைகளைப் பேசிய இனியா சீரியல் - வரவேற்கும் நெட்டிசன்கள்!

இதற்கிடையில், விஜய்யின் 'வாரிசு' படத்தில் சிலம்பரசன் பாடிய 'தி தளபதி' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் அவர் தற்போது விடுமுறையில் இருப்பதால் டிசம்பர் 24 அன்று சென்னையில் நடக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளப்போவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Simbu