சிம்பு நடித்து வரும் திரைப்படம் ஒன்று டிராப் ஆகப்போவதாக பேசப்படுகிறது. இதன் பின்னணி குறித்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மாநாடு படத்திற்கு பின்னர் கம்பேக் கொடுத்த சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சிம்புவுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 2 படங்களை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார்.
அதில் முதல் படமாக கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் உருவாகி வருகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையில் இந்த படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?
அடுத்த படமாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுலின் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்தார். இதற்கான அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆன நிலையில் ஷூட்டிங் நடத்துவது தாமதமாகி வருகிறது.
தற்போது சிம்பு பத்து தல படத்திற்கான ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். இடையே அவரது தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அவரையும் சிம்பு கவனித்து வருகிறார். கொரோனா குமார் படம் அடுத்த கட்டத்திற்கு நகராத நிலையில் இந்த படம் டிராப் ஆகியுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
இந்த படத்திற்கு பதிலாக லிங்கு சாமியின் இயக்கத்தில் ஓர் படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் பேசப்படுகிறது. கன்னடத்தில் மெகா ஹிட்டான முப்தி படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.
முப்தி படத்தில் டான் கேரக்டரில் சிவராஜ் குமார் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனால் பத்து தல படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்தைப் போன்று பத்து தல படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான்தான் இசையமைக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.