Home /News /entertainment /

டீஸர் வெளியீட்டில் சிம்புவின் நம்பர் சென்டிமெண்ட்..

டீஸர் வெளியீட்டில் சிம்புவின் நம்பர் சென்டிமெண்ட்..

சிம்பு

சிம்பு

Simbu Venthu Thaninthathu Kaadu Movie : வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் முன்னோட்ட டீஸரை நாளை வெளியிடுகின்றனர்.

தமிழ் சினிமாவால் பயன்பெறும் மறைமுக பயனாளர்களில் முதன்மையானவர்கள் ஜோசியர்கள். ஒரு திரைப்படத்தின் ஒவ்வொரு நகர்விலும் ஜோசியமும், சென்டிமெண்டும் பார்க்கப்படும். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திலும் அது தொடர்கிறது.

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஜோசியத்தின் அதிதீவிர நம்பிக்கையாளர். நல்ல நேரம் பார்த்தே தினசரி வீட்டைவிட்டு கிளம்புவார். ஒரு நளைக்கு ஒன்பதுமுறை கிளம்ப வேண்டியிருந்தால் ஒன்பது முறையும் நல்ல நேரம் பார்ப்பார். ராகு காலம், எமகண்டத்தில் அறையின் விளக்கை அணைத்து இருட்டில் இருப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் கூறியிருக்கிறார். அதில் கால்வாசியாவது சிம்புவிடம் இருக்கவே செய்யும்.

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் முன்னோட்ட டீஸரை வருகிற பத்தாம் தேதி வெளியிடுகின்றனர். இதில் என்ன ஆச்சயரியமும், சென்டிமெண்டும்? இருக்கிறது. இந்த முன்னோட்ட டீஸரை 1மணி 26 நிமிடங்களுக்கு வெளியிடுகின்றனர். 1 மணிக்கு வெளியிடுவார்கள். 1.10 என்றாலும் ஓகே. அதென்ன 1 மணி 26 நிமிடங்கள்? சிம்புவின் ராசியான நம்பர் ஒன்பது. 1.26 இன் கூட்டுத் தொகை ஒன்பது வருகிறதல்லவா. அதனால்தான் இந்த நேரம்.

also read : புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம்..

டைம் பார்த்து நடித்த படங்கள் எதுவும் சிம்புக்கு கை கொடுக்கவில்லை. டைம் லூப் திரைக்கதை யுக்திதான் வெற்றியை தந்திருக்கிறது. அதற்குப் பிறகும் இப்படி சென்டிமெண்ட் பார்க்கிறார்களே.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Simbu

அடுத்த செய்தி