மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழாவில் சிம்பு கலந்து கொள்ளாதது பேசுபொருளாக மாறியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாநாடு திரைப்படத்தின் 25-வது நாள் விழாவை கொண்டாடும் விதமாக மாநாடு வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. படக்குழுவினர் உற்சாகமாக கலந்து கொண்ட இந்த விழாவில் எஸ் ஜே சூர்யா இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பை நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மாநாடு வெற்றி விழாவில் சிம்பு கலந்து கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் இதற்காக கடுமையான அதிருப்தியையும் எஸ்.ஏ சந்திரசேகர் வெளிப்படுத்தினர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனக்கும் சிம்புவுக்கும் இடையே ஆயிரம் இருந்தாலும் இருவரும் சகோதரர்கள் என பேசி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மாநாடு திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை தன்னைக் கேட்காமல் விற்றுவிட்டதாக, நீதிமன்றத்தை சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் நாடிய நிலையில், இதன் காரணமாக தயாரிப்பாளர் தரப்பிற்கும் சிம்பு தரப்புக்கும் மோதல் எழுந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டது.
இதையும் படிங்க - பிக் பாஸ் போட்டியாளர் மறைவு? சர்ச்சையைக் கிளப்பிய ஜேம்ஸ் வசந்தன் பதிவு
இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழாவில் சிம்பு கலந்து கொள்ளாதது இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் டி ராஜேந்தர் தரப்பு எந்த முகாந்திரமும் இல்லாமல் தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுப்பது அழகில்லை என பாரதிராஜா உள்ளிட்ட முன்னணி திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Also Read : ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புது படத்தில் இத்தனை மாற்றங்களா?
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maanaadu, Simbu, Venkat Prabhu