சாண்டி - தர்ஷனை பாராட்டிய சிம்பு - வைரலாகும் வீடியோ!

சாண்டி - தர்ஷனை பாராட்டிய சிம்பு - வைரலாகும் வீடியோ!
  • News18
  • Last Updated: October 8, 2019, 7:49 PM IST
  • Share this:
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி, மற்றும் தர்ஷனை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிம்பு.

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும் ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். பார்வையாளர்களும் சக போட்டியாளர்களும் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்த்த தர்ஷனுக்கு ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.


இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் சென்னை திரும்பிய நடிகர் சிம்பு, சாண்டி மற்றும் தர்ஷனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.அதில், சாண்டியை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் சிம்பு தர்ஷனையும் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் மஹத்தும் சிம்புவுடன் இருந்துள்ளார்.

வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் நடிக்க தமிழ் கலாசாரத்தை கற்பது முக்கியம்: தமன்னா

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading