• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாநாடு திரைப்படம் சிறப்பு காட்சி திடீர் ரத்து... ரசிகர்கள் ஏமாற்றம்

மாநாடு திரைப்படம் சிறப்பு காட்சி திடீர் ரத்து... ரசிகர்கள் ஏமாற்றம்

மாநாடு

மாநாடு

சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.

  • Share this:
    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார்.

    பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தீபாவளிக்கு மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் படத்தின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, நாளை (நவம்பர் 25)ம் தேதி மாநாடு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னர் சிம்புவின் திரைப்படம் வெளியாகுவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். படத்திற்கு டிக்கெட் புக்கிக் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாநாடு திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சில மணி நேரங்களில் மாநாடு திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் பேசி முடிக்கப்பட்டதால் இன்று திட்டமிட்டப்படி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மாநாடு திரைப்படம் இன்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சியுடன் வெளியாக இருந்தது. ஆனால் லைசென்ஸ் விநியோகத்தில் உள்ள சிக்கல் காரணமாக அதிகாலை காட்சிகள் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனேக திரையரங்குகளில் அதிகாலை காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் முதல் காட்சி தாமதமாகி வந்தது.

    இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை முதல் திரையரங்கில் காத்திருந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: