• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாநாடு ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாநாடு ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாநாடு ட்ரைலர்

மாநாடு ட்ரைலர்

மாநாடு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவித்தபடி வெளியாகுமா என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.

  • Share this:
    சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரசியல் திரைப்படம் மாநாடு. கிறிஸ்டோபர் நோலனின் டெனட் திரைப்படத்தில் வரும் டைம் ட்ராவல், டைம் லூப் திரைக்கதை யுக்தியை மாநாடு படத்தில் வெங்கட்பிரபு பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. கல்யாணி ப்ரியதாஷன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.

    மாநாடு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவித்தபடி வெளியாகுமா என்ற சந்தேகம் பரவலாக உள்ளது. இது குறித்து சிம்பு ரசிகர்கள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும், படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்தும் அப்டேட் கேட்டிருந்தனர். அதற்கு, நாளை பதில் சொல்லிடலாம் என சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார். அதன்படி இன்று, அக்டோபர் 2 ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.



    முன்னதாக ட்ரெய்லர் ஆன்தி வே என்று படத்துக்கு டப்பிங் பேசிய போது எடுத்த புகைப்படத்துடன் சிம்பு ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: