Home /News /entertainment /

மாநாடு படத்தின் இரண்டு நாள் வசூல்-தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ தகவல்

மாநாடு படத்தின் இரண்டு நாள் வசூல்-தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ தகவல்

சிம்பு

சிம்பு

Maanaadu Movie Theatre Collection : மாநாடு திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் 14 கோடி வசூலித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மாநாடு படத்தின் முதல் இரு தின வசூலை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2010 இல் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா ஹிட்டானது. 11 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு ஹிட் படம் சிம்புவுக்கு அமைந்துள்ளது. அவரது முந்தைய வெற்றிப்படங்களான மன்மதன், விண்ணைத் தாண்டி வருவாயா படங்களைவிட மாநாடு வசூலில் பட்டையை கிளப்புகிறது.

சென்னை ரோகினி காம்ப்ளக்ஸில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்றும் நாளையும் காலை 7 மணி காட்சிகளை கூடுதலாக சேர்த்திருக்கிறார்கள். அதேபோல் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.



சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் மாநாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஹாலிவுட்டின் எட்டர்னல்ஸ் திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது.மாநாடு படத்தின் முதல் இருதின வசூல் எவ்வளவு என்று ஆளாளுக்கு ஒரு தொகையை உருட்டிக் கொண்டிருந்தனர்.

also read : குடையுடன் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை அம்ரிதா..

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே அந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். முதலிரு தினங்களில் தமிழ்நாட்டில் படம் 14 கோடிகளை வசூலித்துள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது சிம்புவின் முந்தைய வெளியீடான ஈஸ்வரன் படத்தின் மொத்த வசூலைவிட அதிகம். இன்றும் நாளையும் இதே வேகத்தில் படம் வசூலித்தால், வார இறுதியில் 28 கோடிகளை படம் தாண்டும். இதுவே சிம்புவின் திரைவாழ்க்கையில் அதிகபட்ச வசூலாக இருக்கும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actor Simbhu, Simbhu, Simbu

அடுத்த செய்தி