• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Maanaadu : திட்டமிட்டபடி வெளியாகிறது சிம்புவின் மாநாடு திரைப்படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Maanaadu : திட்டமிட்டபடி வெளியாகிறது சிம்புவின் மாநாடு திரைப்படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மாநாடு ரிலீஸ்

மாநாடு ரிலீஸ்

மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிஅறிவித்த நிலையில், தற்போது சிக்கல்கள் தீர்ந்து திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகும் என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார்.

    பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தீபாவளிக்கு மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் படத்தின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, நாளை (நவம்பர் 25)ம் தேதி மாநாடு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னர் சிம்புவின் திரைப்படம் வெளியாகுவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். படத்திற்கு டிக்கெட் புக்கிக் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்நிலையில், இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாநாடு திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: தொடங்கப்படும் முன்பே விலை பேசப்படும் விஜய் படம்


    இந்நிலையில், பிரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்பட்டு திட்டமிட்டப்படி மாநாடு திரைப்படம் நாளை வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், மாநாடு திரைப்படம் நாளை நிச்சயம் வெளியாகும். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    இதேபோல், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தி, கடவுள் இருக்கிறார் என்று பதிவிட்டார். இதை தொடர்ந்து அனைவருக்கும் நன்றி, நாளை திட்டமிட்டப்படி மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    மேலும் படிக்க: கணக்கு ஆசிரியர் டியூசனில் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்... சீரியல் நடிகை பகீர் தகவல்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: