Maanaadu: ரசிகர்களுக்கு ‘மாநாடு’ படக்குழுவினரின் ரம்ஜான் விருந்து!

Maanaadu: ரசிகர்களுக்கு ‘மாநாடு’ படக்குழுவினரின் ரம்ஜான் விருந்து!

நடிகர் சிம்பு

ரம்ஜானை முன்னிட்டு மே 14 ஆம் தேதி மாநாடு படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

  • Share this:
    ரம்ஜானை முன்னிட்டு மே 14 ஆம் தேதி மாநாடு படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

    மாநாடு படத்தை வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கிறார் என்று அறிவித்த போது அனைவரும் ஆச்சரியப்பட்டனர். முக்கியமாக படத்தை தயாரிக்க முன்வந்த வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சியை வியப்புடன் நோக்கினர். சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வர மாட்டார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில், அவரை ஒப்பந்தம் செய்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தைத் தந்தது.

    திரையுலகம் ஆச்சரியப்பட்டது போலவே படப்பிடிப்பு சிம்புவால் தாமதமானது. மாநாடு படத்தில் சிம்புவே இல்லை என்று சுரேஷ் காமாட்சி சொல்லும் அளவுக்கு நிலைமை போய், சில பல பஞ்சாயத்துக்குப் பிறகு நடிக்க சம்மதித்தார் சிம்பு. தற்போது கிளைமாக்ஸ் வரை படத்தை வெங்கட்பிரபு கொண்டு வந்திருக்கிறார்.

    மாநாடு படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லன். இவர்கள் தவிர பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் என பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், படத்தின் முதல் பாடலை ரம்ஜானை முன்னிட்டு மே 14-ம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
    ஆகஸ்டில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: