Maanaadu: அட்டகாசமான ‘மாநாடு’ அப்டேட்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் சிம்பு

இந்த வருடம் ஈஸ்வரன் படத்தை தந்த சிம்பு இதே வருடத்தில் மாநாடு படத்தை தர இருப்பது அதிசயம்.

  • Share this:
    அதிசயம் ஆனால் உண்மை என்பார்களே. அப்படியொரு வேகத்தில் நடக்கிறது மாநாடு பட வேலைகள். ஒரு படத்துக்கு மூன்று வருடங்கள் எடுக்கும் சிம்பு இதன் நாயகன் என்பதே இதன் சிறப்பம்சம்.

    படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுப்பத்தில் சிம்பு டாக்டரேட் வாங்கியவர். மாநாடு படத்தை அறிவித்ததிலிருந்து பிரச்சனைகள். பன்மையாகச் சொன்னாலும், பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணமாக இருந்தது சிம்பு தான். மாநாடு படத்தை எடுக்கப் போவதில்லை என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விரக்தியுடன் அறிவிப்பது வரை அந்த பிரச்சனை சென்றது. சிலபல பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு மீண்டும் சிம்பு நடிக்க சம்மதித்தார்.

    ஆச்சரியமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த வருடம் ஈஸ்வரன் படத்தை தந்த சிம்பு இதே வருடத்தில் மாநாடு படத்தை தர இருப்பது அதிசயம்.

    மாநாடு படம் அரசியல் பின்னணியில் தயாராகிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லன். அவரது ஆலோசகராக ஒய்.ஜி.மகேந்திரன். தவிர பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் என பலர் நடித்துள்ளனர். நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன். இயக்குநர் ப்ரியதர்ஷன் - லிசி தம்பதியின் மகள். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை.

    படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நேற்று படத்தின் டப்பிங் தொடங்கியது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. கொரோனா இரண்டாம் அலை உச்சமடைந்திருக்கும் நிலையில், மாநாடு திரையரங்கில் வருமா இல்லை ஓடிடியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: