ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழகத்தில் 50 கோடிகளை நெருங்கும் மாநாடு வசூல்!

தமிழகத்தில் 50 கோடிகளை நெருங்கும் மாநாடு வசூல்!

சிம்பு

சிம்பு

சிம்புவின் மாநாடு திரைப்படம் சென்னையில் முதல் 11 தினங்களில் 4.80 கோடிகளை வசூலித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிம்பு படத்தின் வசூல் குறித்து முதல்முறையாக அனைவரும் பேசுகிறார்கள். வெங்கட்பிரபுவின் மாநாடு படத்துக்கே எல்லாப் புகழும்.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான ஈஸ்வரன்கூட பத்தோடு பதினொன்றாகதான் வெளியானது. அதே வேகத்தில்  எந்த எதிர்பார்ப்புக்கும் இடம் கொடுக்காமல் காணாமல் போனது. முதல்முறையாக மாநாடு படம் அனைத்துத் தரப்பினரிடமும் ஆவலை ஏற்படுத்தி அதனை பூர்த்தியும் செய்துள்ளது.

மாநாடு தமிழகத்தில் முதல் 11 தினங்களில் 49 கோடிகளை வசூலித்திருப்பதாக ட்ரேட் அனலிஸ்டுகள் கூறுகின்றனர். 11 தினங்களில் இப்படியொரு வசூலை சிம்புவின் எந்தப் படமும் பெற்றதில்லை. சிம்புவின் வேறு எந்த படத்தின் வாழ்நாள் வசூல்கூட 49 கோடிகளை தொட்டது இல்லை. இன்னும் ஓரிரு தினங்களில் படம் 50 கோடி எல்லையைத் தாண்டும். இதுவொரு மைல்கல்.

மாநாடு திரைப்படம் சென்னையில் முதல் 11 தினங்களில் 4.80 கோடிகளை வசூலித்துள்ளது. சிம்பு, கௌதம் இணையும் படங்கள் சென்னை சிட்டியில் நல்ல வசூலை பெறும். தமிழகத்தின் பிற ஏரியாக்களில் படம் சுமாராகப் போனாலும் சென்னையில் இவர்கள் காம்பினேஷனுக்கு நல்ல கலெக்ஷன் உறுதி. முதல்முறையாக கௌதம் அல்லாத ஒருவரது இயக்கத்தில் வெளியான சிம்பு படம் 4 கோடிகளை சென்னை சிட்டியில் தாண்டியிருக்கிறது.

இதை வைத்து தமிழின் முன்னணி நடிகர்களின் வசூலை மாநாடு எட்டியதாகச் சொல்ல முடியுமா? முடியாது. ரஜினியின் 2.0 சென்னையில் 24 கோடிகளை கடந்து வசூலித்தது. விஜய்யின் சர்கார் 15 கோடிகளை தாண்டியது. அஜித்தின் விஸ்வாசம் 12 கோடிகளை தாண்டி வசூல் செய்தது. சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படமே சென்னையில் 6 கோடிகளைத் தாண்டியது. எனினும் கொரோன காலத்தில் சென்னை சிட்டியில் 4.8 கோடிகளை மாநாடு தாண்டியதே சாதனை தான்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Maanadu, Simbu