சிம்புவின் மாநாடு திரைப்படம் உலகளவில் 117 கோடி வசூல் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருந்தார்.
மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம் லூப் திரைக்கதையில் அமைந்த இந்தக் கதையை எந்த சிக்கலும் இல்லாத தெளிவான காட்சிகளில் விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார் வெங்கட்பிரபு. எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் படத்துக்கு ப்ளஸ் பாயின்டாக அமைந்தன. படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சின்னத்திரையில் டீலா நோ டீலா ரிஷி!
Glad to announce that our #Maanaadu has collected 117Cr at Worldwide Box Office. It becomes this year's Mega Blockbuster. I thank @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @thisisysr @kalyanipriyan @Cinemainmygenes @Richardmnathan @silvastunt @UmeshJKumar @johnmediamanagr
— sureshkamatchi (@sureshkamatchi) May 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாநாடு படம் தமிழகத்தில் முதலிரு தினங்களில் 14 கோடிகளை வசூலித்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். அதாவது ஒரு நாள் சராசரி வசூல் 7 கோடிகள். இந்நிலையில் மாநாடு திரைப்படம் உலகளவில் 117 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. அதோடு கடந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் படம் எனவும் மாநாடு படத்தை குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.