Home /News /entertainment /

வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் வெளியானது… விறுவிறுப்பாக நடைபெறும் டிக்கெட் ரிசர்வேஷன்

வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் வெளியானது… விறுவிறுப்பாக நடைபெறும் டிக்கெட் ரிசர்வேஷன்

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

19 வயது இளைஞன் முதல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டர் கேரக்டர் வரை சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த படம் வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தியேட்டர் நிர்வாகிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தை பொறுத்த அளவில் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    ‘திரைத்துறையினர் படும் கஷ்டங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்’ – நடிகை ரகுல் ப்ரீத்

    கேங்ஸ்டர் டிராமா ஜேனரில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது சென்சார் போர்டுக்கு படக்குழுவினர் தரப்பில் 3 மணி நேரம் அடங்கிய காட்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில நிமிடங்கள் குறைக்கப்பட்டாலும், ஏறக்குறைய 3 மணிநேர அளவிற்கு வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



    முன்னெப்போதுமில்லாத தோற்றத்தில், சிம்பு இந்த படத்தில் நடித்துள்ளார். 19 வயது இளைஞன் முதல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டர் கேரக்டர் வரை சிம்பு இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

    நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

    மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளன. சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது படத்தின் டிரைலர் மாபெரும் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி