சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
கௌதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்திருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளனர். இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களை அடுத்த மாதம் 2-ம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
I am happy to welcome u all for the Grand Audio Launch of @SilambarasanTR_ - @menongautham’s #VendhuThanindhathuKaadu. Witness the Live concert of @arrahman at the launch on Sep 2nd at 5pm, Vels University, Pallavaram!#VTKFromSep15@VelsFilmIntl @RedGiantMovies_ @Udhaystalin pic.twitter.com/YiVkEtRbpA
— Dr Ishari K Ganesh (@IshariKGanesh) August 18, 2022
அதற்கான நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கின்னர். அந்த பாடல் வெளியீட்டு விழா ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி உடன் நடைபெற உள்ளது எனவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்திருக்கிறார்.
சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்... நடிகை ராஷி கன்னாவை பத்திரமாக அழைத்துச்சென்ற தனுஷ்
கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன் கூட்டணியில் ஏற்கனவே வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இதனால் அவர்கள் கூட்டணியில் மீண்டும் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரபல தியேட்டரின் ஸ்க்ரீனை கிழித்த தனுஷ் ரசிகர்கள்… எல்லை மீறிய கொண்டாட்டம்
ஏற்கனவே இந்த படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
முதலில் வெளியிடப்பட்ட காலத்துக்கும் நீ வேணும் பாடலை தாமரை எழுத சிம்புவும், ரக்சிதா சுரேஷும் இணைந்து பாடியிருந்தனர்.
சமீபத்தில் மறக்குமா நெஞ்சம் என்ற அடுத்த பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலையும் தாமரை எழுதியிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள இந்த பாடல், வைரலாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.