ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டிசம்பர் வெளியீட்டை தவிர்த்தது சிம்புவின் ‘பத்து தல’… புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு…

டிசம்பர் வெளியீட்டை தவிர்த்தது சிம்புவின் ‘பத்து தல’… புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு…

பத்து தல படத்தில் சிம்பு

பத்து தல படத்தில் சிம்பு

ஷூட்டிங் தள்ளிக் கொண்டே போவதால், டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டிசம்பர் மாத வெளியீட்டை சிம்புவின் பத்து தல படம் தவிர்த்துள்ளது. இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

  மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

  கன்னடத்தில் நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதையாக வெளியான மஃப்ட்டி, சிவராஜ்குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது.

  ஒன்றுமே செய்யாத நடிகர், நடிகைகள் எல்லா புகழையும் எடுத்துக்கொள்கிறார்கள்-ப்ரியங்கா சோப்ரா ஓபன் டாக்..

  இதற்கிடையே தமிழில் உருவாகும் பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒபேலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

  ' isDesktop="true" id="840711" youtubeid="62lgelB1hh4" category="cinema">

  டிசம்பர் மாதத்தை குறிவைத்து பத்து தல படத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஷூட்டிங் தள்ளிக் கொண்டே போவதால், டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து, வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தப் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்ப படக்குழுவினர் விரைவில் வெளியிடவுள்ளனர்.

  அடி அழகா சிரிச்ச முகமே! ப்ரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்..!

  விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு படங்களைத் தொடர்ந்து சிம்பு நடித்து வரும் பத்து தல படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: AR Rahman, Simbu