ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ அப்டேட்… வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பு?

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ அப்டேட்… வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பு?

பத்து தல படத்தில் சிம்பு

பத்து தல படத்தில் சிம்பு

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்பு – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கன்னடத்தில் வெளியான முஃப்தி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவராஜ் குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். டான் கேரக்டரில் சிவராஜ் குமார் இடம்பெறும் காட்சிகள் மாஸ்ஸாக உருவாக்கப்பட்டிருக்கும்.

    முஃப்தி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக சிம்புவின் பத்து தல படம் உருவாகி வருகிறது. கன்னியாகுமரி பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது ஷூட்டிங் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

    சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் அப்டேட்… வெளியீடு தள்ளிப் போகுமா?

    பத்து தல படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

    விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்பு – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு ஷூட்டிங் மீதம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    மீண்டும் சந்திரமுகி கூட்டணி? ரஜினியின் 170வது படத்தில் இணையும் முக்கிய இரு நடிகர்கள்.?! தீயாய் பரவும் தகவல்

    முஃப்தி படத்தை போல் இல்லாமல் சிம்புவுக்கு இந்த படத்தில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக பத்து தல படத்தை டிசம்பர் 14-ஆம்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு, படக்குழுவினர் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போதைய சூழலில் பத்து தல படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ' isDesktop="true" id="828850" youtubeid="62lgelB1hh4" category="cinema">

    சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் பத்து தல படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் சிம்பு ரசிகர்கள் உள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Simbu