Home /News /entertainment /

சிம்புவுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்… பத்து தல படத்தின் சூப்பர் அப்டேட்

சிம்புவுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்… பத்து தல படத்தின் சூப்பர் அப்டேட்

கெளதம் மேனன்

கெளதம் மேனன்

கன்னடத்தில் மெகா ஹிட்டான முப்தி படத்தின் ரீமேக்காக பத்து தல உருவாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ் ரசிகர்களுக்கேற்ப பல மாற்றங்களை செய்திருப்பதாக இயக்குனர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பத்து தல படத்தின் அப்டேட்டை இயக்குனர் கிருஷ்ணா வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    சிம்புவை வைத்து கவுதம மேனன் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் வெந்து தணிந்தது காடு படம் அடுத்த மாதம் 15ம் தேதி திரைக்கு வருகிறது.

    இந்த படத்தை தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, கர்நாடகா, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    தனுஷ் பட நாயகிக்கு ஆண் குழந்தை பிறந்தது… பிரபலங்கள் வாழ்த்து

    பத்து தல படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கன்னடத்தில் மெகா ஹிட்டான முப்தி படத்தின் ரீமேக்காக பத்து தல உருவாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ் ரசிகர்களுக்கேற்ப பல மாற்றங்களை செய்திருப்பதாக இயக்குனர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

    இந்நிலையில் பத்து தல படத்தின் வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடிப்பார் என இயக்குனர் கிருஷ்ணா அப்டேட் கொடுத்துள்ளார்.

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அச்சம் என்பது மடமையடா, மலையாளத்தில் ஹிட்டான ட்ரான்ஸ் உள்ளிட்ட படங்களில் கவுதம் மேனன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

    சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட புதிய சட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுவர வேண்டும் - பாக்யராஜ் கோரிக்கை

    இந்நிலையில் பத்து தல படத்தில் கவுதம மேனன் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் டிசம்பரில் திரைக்கு வரவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Gautham Vasudev Menon, Simbu

    அடுத்த செய்தி