• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’இருள் நிறைந்த இரவுகளுக்குப் பிறகு பிரகாசமான ஒளி இருக்கும்’ - சிம்பு!

’இருள் நிறைந்த இரவுகளுக்குப் பிறகு பிரகாசமான ஒளி இருக்கும்’ - சிம்பு!

சிம்பு

சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்துக்காக, வெகுவாக உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு.

  • Share this:
    ’இருள் நிறைந்த இரவுகளுக்குப் பிறகு பிரகாசமான ஒளி இருக்கும்’ என நடிகர் சிம்பு தனது படத்தைப் பதிவிட்டு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சிம்பு தற்போது, மஹா, மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ராஹ்மான் அல்லது அனிருத் இசையமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    வெந்து தணிந்தது காடு படத்துக்காக, வெகுவாக உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. அந்தப் படங்களைப் பார்த்த, ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தனது புதிய படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சிம்பு, ”எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், இருண்ட இரவுகளுக்குப் பிறகும் பிரகாசமான ஒளி இருக்கிறது. நன்றி இறைவா” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு அந்த பதிவில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிம்புவின் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் தற்போது லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: