ஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு!

news18
Updated: May 26, 2019, 12:51 PM IST
ஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு!
படப்பிடிப்பு தளத்தில் சிம்பு
news18
Updated: May 26, 2019, 12:51 PM IST
நடிகர் சிம்பு ஹன்சிகாவின் மஹா பட படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகி வருகிறது மஹா. இந்தப் படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களின் இயக்குநர் லக்‌ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இயக்குகிறார்.

ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்க நடிகர் சிம்பு 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிம்பு. அவரை படக்குழுவினர் மாலையிட்டு வரவேற்றுள்ளனர். அதற்கான புகைப்படங்களை படத்தின் இயக்குநர் ஜமீல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Loading...


ஓவியா நடிப்பில் வெளியான ‘90 எம்எல்’ படத்துக்கு இசையமைத்திருந்த சிம்பு, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தார். அதேபோல் ‘மஹா’ படத்திலும் சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலில் சிம்பு இடம்பெறுவார் எனத் தெரிகிறது.

வீடியோ பார்க்க: கவுண்டமணி வாழ்க்கைக் கதை!

First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...