முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த சிம்பு… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த சிம்பு… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

விஜய் - சிம்பு

விஜய் - சிம்பு

வாரிசு படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள ரஞ்சிதமே பாடல் யூடியூபில் வியூஸ், லைக்ஸ்களை குவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தில் சிம்பு இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வர உள்ளது.

விஜய் - ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில், வாரிசு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷாம், குஷ்பு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வாரிசு படத்தை தயாரித்துள்ளது. பொங்கலையொட்டி இந்தப் படம் வெளியாக உள்ளது. அதே நேரம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தியை முன்னிட்டு வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

தற்போது இந்த படங்களின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. முதல் பாடலாக ரஞ்சிதமே பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

' isDesktop="true" id="844592" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

இந்நிலையில் அடுத்த பாடலை வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். தமன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, சிம்பு பாடி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் வாரிசு படத்தில் பாடகராக சிம்புவும் இணைந்து இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வர உள்ளது.

8 ஆண்டுக்கு பின்னர் பொங்கலையொட்டி அஜித்-விஜய் படங்கள் நேரடியாக மோத உள்ளன. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும், லைகா புரொடக்ஷன்ஸ் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது.

ராஷ்மிகாவுக்கு எதிராக திரண்ட திரையுலகம்… படங்களில் நடிக்க தடை விதிக்கப்படுகிறதா?

விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாரிசு படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. தற்போது வாரிசு மற்றும் துணிவு படங்களின் டீசர்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

First published:

Tags: Actor Simbhu, Actor Vijay