• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Simbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

Simbu - Hansika: சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

மகா திரைப்படம்

மகா திரைப்படம்

தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாக கூறி, படத்தை வெளியிட தடை கோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • Share this:
    நடிகர் சிம்பு நடித்த மஹா திரைப்படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் மஹா என்ற படத்தை எக்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கினார்.

    இந்நிலையில், தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாக கூறி, படத்தை வெளியிட தடை கோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அவர் தனது மனுவில், கதைப்படி விமான பணிப்பெண்ணாக இருக்கும் கதாநாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. அதை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை என்றும், இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமல் தனது உதவி இயக்குனரை வைத்து படமாக்கியுள்ளதாகவும், தனக்கு தெரியாமல் படத்தை எடிட் செய்து, பின்னணி குரல் பதிவு செய்து படத்த வெளியிட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மஹா திரைப்படத்தை ஓ.டி.டி தளங்களில் வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளார் மேலும் படத்தின் இயக்குனருக்கு, ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய தொகையை கொடுத்து அதற்கான ரசீதை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 26-ம் தேதி ஒத்திவைத்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: