கெளதம் மேனன் - சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நதிகளிலே நீராடும் சூரியன் படத்தையே இயக்குநர் கௌதம் மேனன், சிம்புவை வைத்து எடுக்க நினைத்தார். ஆனால், அசுரன் போல ஒரு படம் நடிக்க வேண்டும் என்று சிம்பு விரும்பியதால், வெந்து தணிந்தது காடு படத்தை எடுக்கிறார். சிம்புவின் விருப்பம் காரணமாகவே வெந்து தணிந்தது காடு முதலில் எடுக்கப்படுகிறது. இது ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை தழுவி எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம், மும்பையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது.
பிரபல டான்ஸ் மாஸ்டரின் குழந்தைகளுடன் அட்டகாசமாக நடனமாடிய விஜய்!
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக, சிம்பு - கௌதம் மேனன் - ரஹ்மான் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தில் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். ஆகையால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.