Simbu-Gautham Menon: ’நதிகளிலே நீராடும் சூரியன்’ அட்டகாச அப்டேட்!

சிம்பு - கெளதம் மேனன்

நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் போட்டோஷுட் இன்று சென்னையில் நடக்கிறது. ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

  • Share this:
    கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இரு படங்களை ஐசரி கணேசனின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. முதல் படமாக நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படம் தயாராகிறது.

    பொதுவாக கௌதம் வாசுதேவன் படம் அறிவிப்போடு ட்ராப்பாகும், இல்லை பல வருடங்கள் தயாரிப்பில் இருக்கும். விக்ரமை வைத்து அவர் இயக்கிய துருவநட்சத்திரம் இன்னும் வெளியாகவில்லை. சிம்புவின் ராசியும் அப்படியானதே. கடைசி இரு படங்களில் - ஈஸ்வரன், மாநாடு - அந்த ராசியில் நல்ல மாற்றம். குறிப்பிட்ட காலத்தில் நடித்து முடித்தார். இவர்கள் இணையும் படம் எப்போது தொடங்கும்? இல்லை அறிவிப்போடு நிற்குமா? என்ற கேள்விகள் இருந்தன. சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தி.

    நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் போட்டோஷுட் இன்று சென்னையில் நடக்கிறது. ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தை விரைவில் முடித்து, டிசம்பரில் வெளியீட்டுக்கு தயார் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கௌதம், சிம்பு, ஏ.ஆர். இணைந்த படங்கள் எப்படியிருந்தாலும், பாடல்கள் அனைத்தும் உலகத்தரம். ரசிகர்கள் இப்போதும் அந்தப் பாடல்களை கேட்கிறார்கள். ஆகவே நதிகளிலே நீராடும் சூரியனுக்கு இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் படத்தின் இன்னொரு அம்சம், எழுத்தாளர் ஜெயமோகன். தனது படத்தின் கதை, திரைக்கதையை கால்வாசி எழுதிவிட்டு ஷுட்டிங் கிளம்பும் கௌதம் முதல்முறையாக திரைக்கதையில் ஜெயமோகனை பயன்படுத்தியுள்ளார். முழு ஸ்கிரிப்டுடன் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார். ஆகவே, கௌதம் படத்தின் வழக்கமான கிளிட்சே காட்சிகள் இதில் இருக்காது என நம்பலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: