Home /News /entertainment /

சிம்பு - கவுதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' ட்ரெய்லர் வெளியானது

சிம்பு - கவுதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' ட்ரெய்லர் வெளியானது

வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் போஸ்டர்

வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் போஸ்டர்

சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், சித்தீக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின்ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடும் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

    இந்தப் படம் வரும் 15-ம்தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

    சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், சித்தீக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

    நான் எப்போதும் மோடி சப்போர்ட்டர் - சமந்தா ஓபன் டாக்... வைரலாகும் வீடியோ

    இந்த படத்திலிருந்து ஏற்கனவே காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம் என 2 பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.



    வழக்கமான ட்ரெய்லரை விட இதில் வித்தியாசத்தை புகுத்தியுள்ளார் கவுதம் மேனன். ட்ரெய்லர் முழுக்கவும் கவுதம் மேனன் பின்னணி குரலை கொடுத்திருக்கிறார்.  2 நிமிடம் 19 வினாடிகள் ஓடக் கூடியதாக இந்த ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது.

    Cook with comali Pugazh: ஒரு வருடத்திற்கு முன்பே பெரியார் படிப்பகத்தில் பென்சியாவை மணந்த குக் வித் கோமாளி புகழ்!

    கவுதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. அந்த வரிசையில் வெந்து தணிந்தது காடு படமும் இடம்பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: AR Rahman, Gautham Vasudev Menon, Simbu

    அடுத்த செய்தி