Simbu: களத்தில் இறங்கிய சிம்பு ரசிகர்கள்... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SilambarasanTR ஹேஷ்டேக்!

சிம்பு

நாளை தனுஷ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் அவருடைய ரசிகர்கள், சமூக வலைதளப் பக்கங்களில் இன்று பல ஹாஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  • Share this:
இன்று காலையிலிருந்து #SilambarasanTR எனும் ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் சிம்பு ரசிகர்கள்.

அஜித் – விஜய், ரஜினி – கமல் போல அடுத்ததாக அதிக போட்டி உள்ள நடிகர்களாக பார்க்கப்படுகிறார்கள் சிம்பு மற்றும் தனுஷ். இவர்களது ரசிகர்கள் எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் எலியும் பூனையுமாக சண்டையிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நாளை தனுஷ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் அவருடைய ரசிகர்கள், சமூக வலைதளப் பக்கங்களில் இன்று பல ஹாஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு போட்டியாக சிம்புவின் அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல ஹாஸ்டேக்குகளை உருவாக்கி சிம்பு ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் #SilambarasanTR எனும் டேக் காலையிலிருந்து ட்விட்டரில் பிரபலமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிக்க முதலில் சிம்பு அணுகப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: