• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புகார் சொன்ன சிம்பு ரசிகர் - அப்டேட் தந்த மாநாடு தயாரிப்பாளர்!

புகார் சொன்ன சிம்பு ரசிகர் - அப்டேட் தந்த மாநாடு தயாரிப்பாளர்!

மாநாடு

மாநாடு

தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என்பதை தான் முதன்முதலில் அறிவித்தனர்.

  • Share this:
    மாநாடு படம் தீபாவளி வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். எனினும், பல படங்கள் தீபாவளியை குறி வைத்துள்ளதால் மாநாடு திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற கேள்வி உள்ளது.

    சிம்பு ரசிகர்கள் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இணையத்தில் மாநாடே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்து வந்த பதில், 'விரைவில் பதில் சொல்லப்படும்' என்பதே. இதனை ஒரு ரசிகர் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடமே கேட்டுள்ளார்.

    "ஒரு வாரமா, ஆன் தி வே ன்னுதான் வருது. ஒரு டேட் சொன்னா நல்லாயிருக்கும்ல" என்று அந்த ரசிகர் கேட்க, "நாளைக்கு டேட் சொல்லிரலாம்" என சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார்.

    வரும் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என்பதை தான் முதன்முதலில் அறிவித்தனர். வலிமையும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அதன் தயாரிப்பாளர் படம் பொங்கலுக்கு தான் வரும் என்று சொல்லிவிட்டார்.

    இதனால், மகான் உள்பட பல படங்கள் தீபாவளியை குறி வைக்கின்றன. அண்ணாத்தயும்கூட கடைசி நேரத்தில் தள்ளிப்போகலாம் என்ற வதந்தியும் உலவுகிறது. மாநாடு சொன்னபடி தீபாவளிக்கு வருமா என்பது நாளை தெரிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: