முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்தப் பெருமை என் பெற்றோருக்கே - கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு நெகிழ்ச்சி!

இந்தப் பெருமை என் பெற்றோருக்கே - கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு நெகிழ்ச்சி!

சிம்பு

சிம்பு

இந்தப் பட்டம் எனக்கு உரித்தானது அல்ல. எனது இந்த நிலைக்கு முழுக் காரணம் எனது தந்தையும் தாயும் தான் எனத் தெரிவித்திருக்கிறார் சிம்பு.

  • 1-MIN READ
  • Last Updated :

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிம்பு, விழா மேடையில் தனது பெற்றோர் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.

கலைத்துறை நட்சத்திரங்களுக்கு முன்னணி பல்கலைக்கழகங்கள் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அதன்படி நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் நேற்று டாக்டர் பட்டம் வழங்கியது. இதில் சிம்புவுடன் அவருடைய தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

டாக்டர் பட்டம் வாங்கிய சிம்பு, “இந்தப் பட்டம் எனக்கு உரித்தானது அல்ல. எனது இந்த நிலைக்கு முழுக் காரணம் எனது தந்தையும் தாயும் தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால் தான். 9 மாத குழந்தையில் இருந்து என்னை இந்தப் பயணத்தில் இணைத்தது அவர்கள் தான். எனவே இந்தப் பெருமைகள் அனைத்தும் அவர்களுக்கே போய்ச் சேரவேண்டும். அவர்களைப் போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

தவிர, சிம்பு தற்போது கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Simbu, Simbu next movie