Eeswaran: நாளை ஓடிடி-யில் வெளியாகும் சிம்புவின் ஈஸ்வரன்!

ஈஸ்வரன்

முக்கியமாக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்தில் இதில் நடித்திருந்தார் சிம்பு.

  • Share this:
    நீண்ட நாள்களுக்குப் பின் சிம்பு நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் ஈஸ்வரன். இப்படம் நாளை அதாவது ஜுன் 12-ம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடிதளத்தில் வெளியாகிறது.

    சிம்பு ஒழுங்காக படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், மாநாடு படமும் சர்ச்சையில் சிக்கியிருந்த நேரத்தில் சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை தொடங்கினார் சுசீந்திரன். அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார் சிம்பு. முக்கியமாக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்தில் இதில் நடித்திருந்தார்.

    கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா, மனோஜ், பால சரவணன் உள்பட பலர் நடித்திருந்தனர். எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் 'டப்' செய்து வெளியிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வருடம் திரையரங்கில் மாஸ்டர், சுல்தான், கர்ணன் படங்கள் வெற்றிகரமாக ஓட, 2021 ஜனவரியில் திரைக்கு வந்த ஈஸ்வரன் சுமாராகவே போனது. தற்போது இதன் ஓடிடி உரிமையை டிஸ்னி + ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. அவர்கள் இந்தப் படத்தை நாளை தங்கள் தளத்தில் வெளியிடுகின்றனர்.

    சிம்பு நடிப்பில் அடுத்து மாநாடு திரைப்படம் வெளிவருகிறது. இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: