முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெந்து தணிந்தது காடு ஆடியோ ரிலீஸுக்கு ஹெலிகாப்டரில் வந்தாரா சிம்பு? நடந்த சம்பவம் இதுதான்…

வெந்து தணிந்தது காடு ஆடியோ ரிலீஸுக்கு ஹெலிகாப்டரில் வந்தாரா சிம்பு? நடந்த சம்பவம் இதுதான்…

சிம்பு

சிம்பு

ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது என்பது சுவாரஸ்யமான தகவல் என்பதால், இது வைரலாக பரவியது. மேலும் சிம்புவின் பாதுகாப்பு குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சிம்பு, கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில், சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட படக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வெந்து தணிந்தது காடு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…

பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு கமல், சிம்பு மற்றும் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் ஆகியோர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவின.

ஆனால் நடந்தது அதுவல்ல என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது என்பது சுவாரஸ்யமான தகவல் என்பதால், இது வைரலாக பரவியது. மேலும் சிம்புவின் பாதுகாப்பு குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

என் க்ரஷ் அவர் தான்.. பிரபல நடிகரை கைகாட்டிய ரம்யா கிருஷ்ணன்!

நேற்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிம்பு ஹெலிகாப்டரில் வரவில்லை. விழாக்குழுவினர் சிம்புவுக்காக ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் அவர் காரில்தான் விழா நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கிறார். படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹெலிகாப்டரை படக்குழுவினர் யாரும் பயன்படுத்தவில்லை. இரண்டு மூன்று முறை ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தில் ஹெலிகாப்டர் வட்டமடித்துள்ளது.

' isDesktop="true" id="796014" youtubeid="AwG-AtAtiB8" category="cinema">

இதற்கிடையே நேற்று வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் சிம்புவுடன் சித்தி இத்னானி, நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு, கௌதம் மேனன், ரஹ்மான் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் உருவாகியுள்ளது.

First published:

Tags: Simbu