Simbu: பனீர் மஷ்ரூம் செய்த சிம்பு - வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ!

சிம்பு

லாக்டவுன் என்பதால் ஷேவ் பண்ணிவிட்டேன். என் முகமே இப்பதான் எனக்கு தெரியுது.

  • Share this:
    நடிகர் சிம்பு பனீர் மஷ்ரூம் செய்த த்ரோபேக் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், 'மாநாடு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூன் 21-ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    உடல் எடையைக் குறைத்த சிம்பு தற்போது படங்களில் பிஸியாக இருக்கிறார். பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் அவரது கைவசம் உள்ளன.




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் கிச்சனில் தான் சமைக்கும் த்ரோபேக் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சிம்பு. அதில், "பன்னீர் மஷ்ரூம் செய்கிறேன். லாக்டவுன் என்பதால் ஷேவ் பண்ணிவிட்டேன். என் முகமே இப்பதான் எனக்கு தெரியுது. இவ்வளவு நாள் தாடி வச்சிருந்ததால தெரியல" என தன்னை வீடியோ எடுக்கும் சையது நிவாஸிடம் பேசிக்கொண்டே நடிகர் சிம்பு சமைக்கிறார்.

    இந்த வீடியோவை தற்போது சிம்பு ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: