தனுஷ் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு...! வைரல் வீடியோ

தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட மோதலில் விஷாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘எனக்கா ரெட்கார்டு’ என்ற பாடல் படத்தில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

news18
Updated: February 3, 2019, 11:19 AM IST
தனுஷ் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு...! வைரல் வீடியோ
கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சிம்பு
news18
Updated: February 3, 2019, 11:19 AM IST
நடிகர் சிம்பு தனது 36-வது பிறந்த நாளை ஒட்டி தனுஷ், ஜெயம் ரவி மற்றும் யுவன் சங்கர் ராஜா உடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வரும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட மோதலில் விஷாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘எனக்கா ரெட்கார்டு’ என்ற பாடல் படத்தில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


முதலில் எனது படத்துக்கு கட் அவுட், பேனர், பால் அபிஷேகம் வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பின்னர், இரண்டாவது வீடியோவில் ரசிகர்கள் தனக்கு அண்டாவில் பால் கொண்டு வந்து ஊற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். எதிர்ப்பாளர்களுக்கு பதிலடியாக இரண்டாவது வீடியோவை சிம்பு வெளியிட்டதாக கூறப்பட்டது.இந்த பரபரப்புகளுக்கிடையே படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தனது 36-வது பிறந்தநாளை சிம்பு சக திரைத்துறை நண்பர்களான தனுஷ், ஜெயம் ரவி, யுவன் சங்கர் ராஜா மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ள வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

Also See..

First published: February 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...