சட்டையின்றி வெளியான சிம்பு புகைப்படம் - அதிர்ந்த ரசிகர்கள்!

சிம்பு

கௌதமின் படத்துக்காக இப்போது மிரண்டு போகும் அளவுக்கு உடல் எடையை குறைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சட்டையின்றி வெளியான சிம்புவின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தளவுக்கு உடல் மெலிந்து போய் காட்சியளிக்கிறார் சிம்பு.

சின்சியாரிட்டிக்கும் தனக்கும் சிறு சம்பந்தம்கூட இல்லாமல் பார்த்துக் கொண்டவர் சிம்பு. படப்பிடிப்புக்கு வராமல் இருப்பது, தாமதமாக வருவது, வந்தாலும் நடிக்காமல் எஸ்ஸாவது என்று சிம்பு இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கொடுத்து வந்த டார்ச்சர்கள் ஏராளம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் உச்சமாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சுமார் 18 கோடிகள் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினார். அதற்கான பஞ்சாயத்து இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. மாநாடு படம் ஆரம்பிக்கும் முன் அவர் கொடுத்த டார்ச்சரால் படத்தையே நிறுத்தும் அளவுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சென்றதும் நடந்தது.

வடிவேலு பாஷையில், அது போன மாசம் என்பது போல் ஈஸ்வரன் படத்திலிருந்து முற்றிலும் மாறினார் சிம்பு. மாநாடு படத்தை குறிப்பிட்ட தேதியில் முடித்துக் கொடுத்தார். கௌதமின் படத்துக்காக இப்போது மிரண்டு போகும் அளவுக்கு உடல் எடையை குறைத்துள்ளார். அச்சம் என்பது மடமையடா படத்தில் பார்த்திபன் அளவுக்கு இருந்தவர், இப்போது அதில் பாதியளவுக்கே இருக்கிறார்.



Also read... பாய்காட் ராதிகா ஆப்தே ஏன் ட்ரெண்டாகிறது?

எல்லாம் வெந்து தணிந்தது காடு படத்துக்காக. பர்ஸ்ட் லுக்கில் சட்டையுடன் இருந்த சிம்புவைப் பார்த்தே ஆச்சரியப்பட்டவர்கள், தற்போது வெளியாகியிருக்கும் சிம்புவின் சட்டையில்லாத படத்தைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.  தனுஷுக்கு அடுத்த தேசிய விருது கன்பார்ம் எனும் போதுதான் சிம்புக்கு சின்சியாரிட்டியே வந்திருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published: