மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய சிம்பு

மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய சிம்பு

மாநாடு படக்குழு

மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநாடு படக்குழுவினருடன் நடிகர் சிலம்பரசன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

  • Share this:
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். ஏப்ரல் 16-ம் தேதி காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அடுத்தநாள் (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருக்கு வயது 59.

விவேக்கின் மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் க்ரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 1 கோடி மரங்கள் நடும் கனவுக்கு உயிர் கொடுத்து வந்த விவேக் இதுவரை 34 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார். அவர் விட்டுச் சென்ற பணியை 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணியை திரையுலகினர், ரசிகர்கள் என பலர் தற்போது கையிலெடுத்துள்ளனர்.

விவேக் இறந்தபோது இரங்கல் செய்தி வெளியிட்டிருந்த நடிகர் சிம்பு, விவேக்கின் கனவை நனவாக்கும் விதமாக ஆளுக்கொரு மரமாவது நடுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று கூறியிருந்தார். தான் கூறியது வெறும் வாய்வார்த்தையாக மட்டுமல்லாமல் அதை தற்போது செயல்படுத்தியும் உள்ளார் நடிகர் சிம்பு.



மாநாடு படத்தின் படப்பிடிப்பில் ‘மரத்தோடு மாநாடு’ என்ற பெயரில் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டு வைத்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: