ஹன்சிகா மோத்வானி, சிம்பு நடித்திருக்கும் மஹா திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள்.
மஹா ஹன்சிகாவின் 50-வது படம். படம் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது. தயாரிப்பாளரின் பணமுடையால் சிட்டி பஸ் போல சிக்னலுக்கு சிக்னல் நின்று இளைப்பாறி பூசணிக்காய் உடைப்பதற்குள் வருடங்கள் பல ஓடின. ஹன்சிகா காவி உடையில் சுருட்டு பிடிக்கும் போஸ்டர் வெளிவந்து சர்ச்சையானது சிலருக்கு நினைவிருக்கலாம். இதனை குறிப்பிட காரணம் இருக்கிறது. மஹா நாயகி மையத் திரைப்படம். அப்படியானால் சிம்பு?
Pandian Stores: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - நன்றி சொன்ன குழுவினர்!
சும்மா கெஸ்ட் ரோலுக்காகத்தான் உள்ளே வந்தார். ஹன்சிகா தனது முன்னாள் காதலி என்பதால் படப்பிடிப்புக்கு சின்சியராக வர, அவரது கதாபாத்திரத்தை இழுத்து, பாடல் எல்லாம் வைத்து, படத்தின் பெரும்பகுதி வருவதுபோல் ஆக்கிவிட்டார் இயக்குனர் ஜமீல். படத்தில் சிம்பு இருப்பதால் வியாபாரத்துக்கு எளிது என்பதால் கதையில் செய்யப்பட்ட மாற்றத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
பல வருட காத்திருப்புக்குப் பின் ஒருவழியாக மஹாவின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள். ஏப்ரல் 28-ம் தேதி படம் திரைக்கு வருகிறதாம். ஹன்சிகா ரசிகர்களுக்கு இது ஹேப்பி நியூஸ். அதே நேரம், பாடல், காதல் காட்சிகள் என்று நிரம்ப இருப்பதால் சிம்பு ரசிகர்களும் தியேட்டரில் படத்தை கொண்டாட்டமாக ரசிக்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.