• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிம்பு, கௌதம் கார்த்திக்கின் பத்து தல புதிய அப்டேட்!

சிம்பு, கௌதம் கார்த்திக்கின் பத்து தல புதிய அப்டேட்!

 பத்து தல

பத்து தல

கௌதமின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துவரும் சிம்பு, விரைவில் பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்படும் படங்களில் பத்தில் ஐந்து படங்கள் அறிவிப்போடு கைவிடப்படும். அப்படியொரு அதிர்ஷ்டம் பத்து தல படத்துக்கும் அமைந்து, கடைசி நேரத்தில் மாறிப்போனது. ஸ்டுடியோ கிரீன் விடாப்பிடியாக படத்தை சமீபத்தில் தொடங்கியது.

பத்து தல படம் கன்னடத்தில் வெளியான முப்தி படத்தின் தமிழ் ரீமேக். ஷிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி கன்னடப் படத்தில் நடித்திருந்தனர். படம் அங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுக இயக்குனர் நார்த்தன் படத்தை இயக்கியிருந்தார். தமிழில் ஓபேலி கிருஷ்ணா இயக்குகிறார்.

கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் ஊரடங்கு விலக்கிக் கொண்டதும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன.

அவர் இதில் போலீஸ் அதிகாரியாகவும், சிம்பு கேங்ஸ்டராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் அப்டேட்டை தந்திருக்கும் ஸ்டுடியோ கிரீன், விசாகப்பட்டணத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது

Also read... ஏஜிஎஸ் நிறுவனத்தில் கோமாளிப்பட இயக்குனர்!

கௌதமின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துவரும் சிம்பு, விரைவில் பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். .ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரிக்கிறது. இவர்கள் அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தை தயாரிக்கின்றனர். இதுவொரு சூப்பர்ஹீரோ கதை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: