ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பக்கா மாஸ்.. சிம்பு ரசிகர்களுக்கான புத்தாண்டு கிஃப்ட்... பத்து தல படத்தின் ரிலீஸ் அப்டேட்!

பக்கா மாஸ்.. சிம்பு ரசிகர்களுக்கான புத்தாண்டு கிஃப்ட்... பத்து தல படத்தின் ரிலீஸ் அப்டேட்!

பத்து தல

பத்து தல

இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி,  மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கும் பத்து தல படம் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி,  மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் சார்பில்  கே.ஈ.ஞானவேல் ராஜா, சிலம்பரசனின் பத்து தல என்ற இந்தப் படத்தை தயாரிக்கின்றார்.  இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் வெளியீடு 3 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் மார்ச் 30 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.  பத்து தல படத்தின் வேலைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. ஆனால்  சில காரணங்களால் படப்பிடிப்பில் சிலம்பரசன் கலந்து கொள்ளவில்லை.  இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் சுமூக உடன்பாடு ஏட்டப்படவே பத்து தல படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்புவின் பத்து தல திரைப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Also read... உன் சிரிப்பினில்.. உன் சிரிப்பினில்.. என் மனதின் பாதியும் போக - ஆண்ட்ரியாவின் கியூட் போட்டோஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Simbhu, Gautham karthik