• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடுவிரலைக் காட்டும் சிம்பு... வெளியானது மாநாடு டிரெய்லர்!

நடுவிரலைக் காட்டும் சிம்பு... வெளியானது மாநாடு டிரெய்லர்!

சிம்பு

சிம்பு

போலீஸ் காதாப்பாத்திரத்தில் வரும் எஸ்.ஏ.சூர்யா, தனக்கே உரிய பாணியில் வசனங்களை பேசி மிரட்டியிருக்கிறார். மேலும், டிரெய்லர் முடியும்போது நடிகர் சிம்பு நடுவிரலைக் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில்உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

    அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    Also read... பொங்கல் ரிலீஸை புரட்டிப்போட்ட ராஜமௌலியின் முடிவு!

    மாநாடு திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் மெகரசைலா பாடல் முன்னதாகவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.



    அல்லாவும், சிவனும் சேர்ந்து உங்க மூலமா என்னமோ செய்ய நினைக்கிறாங்க. இப்படியான வசனங்கள் கவனம் பெறுகின்றன. இந்த டிரெய்லரில் ஒய்.ஜி.மகேந்திரன் சிம்புவிடம், என்னயா டெனெட் படம் மாதிரி போட்டு குழபுற என்கிறார். முன்னதாகவே மாநாடு பட டீசர் வெளியான போது டெனெட் படத்துடனொப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    போலீஸ் காதாப்பாத்திரத்தில் வரும் எஸ்.ஏ.சூர்யா, தனக்கே உரிய பாணியில் வசனங்களை பேசி மிரட்டியிருக்கிறார். மேலும், டிரெய்லர் முடியும்போது நடிகர் சிம்பு நடுவிரலைக் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: