சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஏ.ஜி.ஆர். கேரக்டருக்காக தனது கெட் அப்பை சிம்பு மாற்றியுள்ளார்.
சிம்பு நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த மாநாடு திரைப்படம் பிரமாண்டமான வெற்றியை பெற்றது. கதைக்கு ஏற்ற நடிப்பை அளித்ததுடன், தனது ஸ்லிம்மான தோற்றத்தால் ரசிகர்களை சிம்பு பெரிதும் கவர்ந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்துள்ளார். சில காட்சிகளில் கிராமத்து இளைஞான வெகு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பை சிம்பு பெற்றுள்ளார்.
வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து க்ளிம்ஸ் காட்சிகள் மற்றும் காலத்துக்கும் நீ வேணும் லிரிக்கல் வீடியோ ஆகியவை வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க - சிம்புவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சீரியல் நடிகை - சோஷியல் மீடியாவில் வைரலாகும் போஸ்ட்!
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து, ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ள பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு பங்கேற்க உள்ளார்.
இது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான முப்தி படத்தின் ரீமேக்காகும். இதில் சிவராஜ்குமார் டான் கேரக்டரில் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.
இதையும் படிங்க - விக்ரமின் ‘மகான்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது படக்குழு…
இதை தமிழில் பத்து தல படத்தில் ஏ.ஜி.ஆர். என்ற கேரக்டரில் சிம்பு நடித்து வருகிறார். இதற்காக மீண்டும் உடல் எடையை அதிகரிக்க செய்து, சால்ட் அண்டு பெப்பர் லுக்கிற்கு சிம்பு மாறியுள்ளார்.
பத்து தல படப்பிடிப்பு மீண்டும் வரும் 27-ம்தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் சிம்புவுடன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஒபேலி கிருஷ்ணா இயக்குகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.