ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யா, விஜய் சேதுபதி, கமலை பின்னுக்கு தள்ளிய சிம்பு… இரண்டே ஆண்டுகளில் சாதனை

சூர்யா, விஜய் சேதுபதி, கமலை பின்னுக்கு தள்ளிய சிம்பு… இரண்டே ஆண்டுகளில் சாதனை

சிலம்பரசன்

சிலம்பரசன்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இன்ஸ்டாகிராமில் எந்த தமிழ் நடிகருக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான ஃபாலோயர்ஸை சிம்பு பெற்றுள்ளார். மிக குறுகிய காலத்தில் இவ்வளவு ஃபாலோயர்ஸை அவர் பெற்றிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

உடல் எடை அதிகரிப்பு, தொடர் தோல்வி படங்களால் சிரமப்பட்டு வந்த சிம்பு, கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் ஸ்லிம்மான தோற்றத்தில் கம் பேக் கொடுத்தார்.

ஈஸ்வரன் திரைப்படம் தோல்வியில் முடிந்தாலும், பழைய சிம்புவை பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள் இருந்தார்கள். இதன்பின்னர் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வெளியான மாநாடு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க - 2 நாட்களில் 2 மில்லியன் பார்வைகளை கடந்த வாடிவாசல் பாடல்… லெஜண்ட் சரவணனுக்கு குவியும் பாராட்டு

இதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு, கவுதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு, பல்வேறு படங்களுக்கு பாடல்களை பாடுவது என சிம்பு ஃபுல் ஃபார்மில் இருந்து வருகிறார்.

அவரது சாதனையில் மற்றொன்றாக இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இது தமிழ் சினிமா நடிகர்கள் யாரும் அடையாத உச்சமாகும்.

இதையும் படிங்க -  இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற நடிகர் யாஷ்… கன்னட திரையுலகில் சாதனை

அஜித், விஜய், ரஜினி ஆகியோர் இன்ஸ்டாகிராமில் இல்லாத நிலையில், கமலுக்கு 1.6 மில்லியன் ஃபாலோயர்சும், விஜய் சேதுபதிக்கு 5 மில்லியன் ஃபாலோயர்சும், தனுஷுக்கு 4.2 மில்லியன் ஃபாலோயர்சும் உள்ளனர். சூர்யா 4.3 மில்லியன்ஸ் ஃபாலோயர்ஸை பெற்றிருக்கிறார்.

சிம்பு இன்ஸ்டாகிராமில் தனது முதல் பதிவை கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் வெளியிட்டுள்ளார். இதன்பின்னர் படு ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது வரை 143 பதிவுகளை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார்.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் சிம்பு குரலில் வெளிவந்துள்ள காலத்துக்கும் நீ வேணும் பாடல் மெகா ஹிட்டாகியுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Actor Simbhu, Actor Suriya, Actor Vijay Sethupathi