முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தளபதி 66-ல் விஜய்க்கு அண்ணனாக வெள்ளி விழா நாயகன் மோகன்?

தளபதி 66-ல் விஜய்க்கு அண்ணனாக வெள்ளி விழா நாயகன் மோகன்?

விஜய் - மோகன்

விஜய் - மோகன்

தளபதி 66 படத்தில் சரத்குமார் விஜய்க்கு அண்ணனாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தந்தையாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

  • Last Updated :

நடிகர் விஜய்யின் 66-வது படமான தளபதி 66-ல் விஜய்க்கு அண்ணனாக நடிகர் மோகன் நடிப்பதாக தகவல்கள் பரவின.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இதையடுத்து விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர்கள் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஒரு பாடல் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இதன் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் தமன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

பிரசவத்திற்கு பிறகு கவர்ச்சியாக இல்லை... ஆனால் அழகாக இருக்கும்!

தளபதி 66 படத்தில் சரத்குமார் விஜய்க்கு அண்ணனாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தந்தையாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 1980-களில் வெள்ளி விழா நாயகனாக கொண்டாடப்பட்ட, நடிகர் மோகன், தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

சிவக்குமார் குடும்பத்தில் 3-வது தலைமுறை நடிகர்... நடிக்க வரும் சூர்யாவின் மகன் தேவ்?

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள நடிகர் மோகன், தான் விஜய் படத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தியை மறுத்துள்ளார். ஹரா படத்தில் நடித்து முடித்த பிறகே, அடுத்த படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் தெரிவித்தார். அதோடு தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்கவும் முடிவு செய்துள்ளார் மோகன்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor Thalapathy Vijay