ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முடிந்தது ஷூட்.. செல்ஃபியுடன் 'பத்துதல' அப்டேட் சொன்ன சிம்பு!

முடிந்தது ஷூட்.. செல்ஃபியுடன் 'பத்துதல' அப்டேட் சொன்ன சிம்பு!

Pathu thala

Pathu thala

Silambarasan: பத்து தல படத்தின் ஷூட்முடிந்துவிட்டதாக சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

    நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதையாக வெளியான மஃப்ட்டி, சிவராஜ்குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது. இதற்கிடையே தமிழில் உருவாகும் பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.

    ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்து முடிந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக நடிகர் சிம்பு ட்வீட் செய்துள்ளார்.

    முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு..

    இந்தியா  சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒரு பிராண ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

    Read More: ரூ.500 கோடி வசூலிக்குமா பொன்னியின் செல்வன்? தீபாவளி படங்களால் தியேட்டர் சிக்கல்!

    இவர்கள் இருவரும் புதிய படத்திற்கு இணைவது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு முறை இருவரும் சந்தித்து பேசி இருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் உறுதியானால் அவர்கள் இணையும் படம் எனவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி வரும் அனிமேஷன் திரைப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    Published by:Murugadoss C
    First published:

    Tags: Simbu