Home /News /entertainment /

ஒருவரது உடல் தோற்றத்தை விமர்சிக்காதீர்கள்… நடிகர் சிம்பு வேண்டுகோள்…

ஒருவரது உடல் தோற்றத்தை விமர்சிக்காதீர்கள்… நடிகர் சிம்பு வேண்டுகோள்…

விழாவில் பேசும் சிம்பு

விழாவில் பேசும் சிம்பு

எனது நடிப்புக்கு வெந்து தணிந்தது காடு படத்தில் அதிக பாராட்டு வந்தது. இது நம்பிக்கை கொடுத்துள்ளது. இன்னும் வித்தியாசமான படங்கள் பண்ண வேண்டும். – சிம்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஒருவரது உடல் தோற்றத்தை விமர்சிக்காதீர்கள் என்று விமர்சகர்ளுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெந்து தணிந்தது காடு படக்குழுவின், நன்றி தெரிவிக்கும் விழாவில் சிம்பு பேசியுள்ளார். அந்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

    விழாவில் சிம்பு பேசியதாவது-

    ரெகுலர் கமர்ஷியல் படங்களுக்கு உண்டான எதுவுமே இதில் இல்லை. இப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    முதல்முறையாக ஒருநாள் முன்னாடியே படத்தோட கேடிஎம் கிடைத்தது. இது எல்லாம் பார்க்கும்‌போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த உலகத்தில் தான் வாழ்கிறோமா என்று தோன்றுகிறது.

    ஏனென்றால் அவ்வளவு வலியை கடந்து வந்துள்ளேன். சினிமாவில் வருவது போல் எனது வாழ்க்கையிலும் நடந்துள்ளது. சிம்பு உடலை குறைத்தார், நன்றாக நடித்தார்‌என்று எல்லாம் சொல்கிறார்கள் ஆனால் இப்படத்தில் என்னைத்தான் வைத்து செய்தார்கள். நிறைய காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டன. இப்படத்தின் மேக்கிங் வீடியோ பார்த்தால் தெரியும்.

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கான விதிகளில் மாற்றம்…

    எனது நடிப்பை ஜெயமோகன் பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. எனது நடிப்புக்கு இதில் அதிக பாராட்டு வந்தது. இது நம்பிக்கை கொடுத்துள்ளது. இன்னும் வித்தியாசமான படங்கள் பண்ண வேண்டும்.

    எனக்கு பிடித்த பாட்டும் மல்லிப்பூதான். இப்படம் குறித்து எனக்கு ஒரு பயம் இருந்தது. தட்டிவிட நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக் கொடுக்க ஆட்கள் இல்லை. இரண்டாம் பாகத்தில் எனது ரசிகர்களுக்காக நிறைய ஆக்ஷன் காட்சிகள் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இது கேங்ஸ்டர் படம் கிடையாது எப்படி கேங்ஸ்டர் ஆகிறான் என்பதே முதல் பாகம். இப்படத்தில் என் உடம்பை வைத்து ஒன்றுமே எழுதமுடியாது. அந்த சிலபேருக்கு சொல்கிறேன். ஒரு படத்தை விமர்சிக்கலாம். தனிப்பட்ட மனிதனை அவரது உருவத்தை வைத்து விமர்சனம் செய்வது ரொம்ப தவறு தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சிக்காதீர்கள்.

    இவ்வாறு சிம்பு பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி