ரத்தம் வழிய பிரார்த்தனை செய்யும் சிம்பு... ‘மாநாடு’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ரத்தம் வழிய பிரார்த்தனை செய்யும் சிம்பு... ‘மாநாடு’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
மாநாடு ஃபர்ஸ்ட் லுக்
  • News18 Tamil
  • Last Updated: November 21, 2020, 12:38 PM IST
  • Share this:
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தை 40 நாட்களில் முடித்துக் கொடுத்தார் சிம்பு. மேலும் படத்துக்காக முழுவதுமாக உடல் எடையக் குறைத்து அசத்தியிருந்தார் சிம்பு. சிம்புவின் இந்த அதிரடி மாற்றம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஈஸ்வரன்’ படத்தை முடித்த கையோடு நவம்பர் 9-ம் தேதியிலிருந்து பாண்டிச்சேரியில் தொடங்கிய ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. சிலம்பரசன் முதல்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு தலையின் ஒரு பக்கத்திலிருந்து ரத்தம் வழிய, அவர் கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘மாநாடு’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ள ரசிகர்களிடையே நிலையில், இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் #maanaadufirstlook என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading