சிம்புவின் சினேக் சர்ச்சை - ‘ஈஸ்வரன்’ டீமுக்கு நல்ல செய்தி சொன்ன வனத்துறை

‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்பு தான் என வனத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சிம்புவின் சினேக் சர்ச்சை - ‘ஈஸ்வரன்’ டீமுக்கு நல்ல செய்தி சொன்ன வனத்துறை
ஈஸ்வரன் படத்தில் சிம்பு
  • Share this:
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் படமாக்கி முடித்துள்ளது படக்குழு.

தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் சிம்பு பாம்பை கையில் பிடித்து இருப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. அது நிஜ பாம்புபோல உள்ளதாகவும் நிஜ பாம்பை கையில் பிடிப்பது திரைப்படத்தில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்று வனத்துறை அதிகாரிகளிடம் வன ஆர்வலர்கள் புகார் அளித்தனர்.

விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லாச்சான்று இல்லாமல் பாம்பு காட்சி பயன்படுத்தியது performing animals registration rules 2001-க்கு எதிரானது என்றும், அது விஷப் பாம்பு அல்ல என்பதை நிரூபிக்கும் வரை எந்தவிதமான விளம்பரமும் செய்யக்கூடாது என்றும் விலங்கு நலவாரியம் படக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.


மேலும் படிக்க: நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லையா?

இந்த நிலையில் படக்குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் படத்தின் காட்சிகளையும் கிராஃபிக்ஸ் காட்சிகளையும் ஒப்படைத்து அது ரப்பர் பாம்பு தான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இதனை வனத்துறை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதலை ஈஸ்வரன் படக்குழு பெறுவதற்கு ஒரு தடை நீங்கி உள்ளது.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading