ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நண்பன் மஹத்துக்காக.. ஷிகர் தவான் நடிக்கும் பாலிவுட் படத்தில் பாட்டு பாடிய சிம்பு!

நண்பன் மஹத்துக்காக.. ஷிகர் தவான் நடிக்கும் பாலிவுட் படத்தில் பாட்டு பாடிய சிம்பு!

சிம்பு

சிம்பு

Double XL திரைப்படத்தில் தமிழ் நடிகர் சிலம்பரசன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சோனாக்ஷி சிங்கா மற்றும் ஹூமா குரேஷி இணைந்து நடிக்கும் Double XL திரைப்படத்தில் தமிழ் நடிகர் சிலம்பரசன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

  சிலம்பரசனின் நண்பரும் தமிழ் நடிகருமான மஹத் தற்போது ஹிந்தியில் உருவாகும் Double XL என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் சோனாக்ஷி சிங்கா மற்றும் ஹூமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்தப் படத்தில் Sohai Sen இசையமைப்பில் உருவாகும் Taali Taali என்ற பாடலை சிலம்பரசன் பாடியுள்ளார்.

  இது குறித்து செய்தியை பகிர்ந்துள்ள ஹூமா குரேஷி, Double XL குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம். எங்கள் படத்தில் பாடல் பாடியுள்ள உங்களுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம். நீங்கள் இல்லாமல் Taali Taali பாடல் முழுமையடைந்திருக்காது என கூறியுள்ளார். Double XL படத்தின் மூலம் மஹத் இந்திக்கு செல்கிறார். அவருக்காகவே நடிகர் சிம்பு அந்தப் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவு vs விஜய்யின் வாரிசு? தியேட்டர் ஓனர்ஸ் ப்ளான் இதுவா?

  ஷிகர் தவான்..

  கிரிக்கெட்டில் ஜொலித்த ஷிகர் தவானுக்கு இப்படமே பாலிவுட்டின் அறிமுகமாகும். அப்படத்தில் ஷிகர் நடித்த காட்சிகளின் போட்டோஸ் இணையத்தில் வைரலானது. அதில் கருப்பு கோட்ஷூட்டும், அவருக்கே உரித்தான ஹேஸ் டைலுடனும் அவர்இ ருந்தார்.. காலா படத்தில் நடித்து புகழ்பெற்ற ஹூமாவுடன் டான்ஸ் ஆடும்படி இருந்தது அந்த போட்டோ.

  Double XL திரைப்படம் காமெடி ட்ராமா படமாக உருவாகியுள்ளது. ஹெல்மெட் படத்தை இயக்கிய ராட்ராம் ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் போஸ்டர்களும் ஏற்கெனவே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் படம் நவம்பர் 4ம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

  இப்படத்தின் கதை தனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அதனால் இப்படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டதாகவும் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய நாட்டுக்காக விளையாடும் ஒரு விளையாட்டு வீரனாக எனக்கு வாழ்க்கை மிகவும் நெருக்கடியாகவே இருக்கும். எனக்கு பிடித்த பொழுதுபோக்கே நல்ல திரைப்படங்களைப் பார்ப்பதுதான். எனக்கு படம் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தபோது நான் கதையைக் கேட்டேன். அந்தக்கதை எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இப்படம் ஒரு அழகான விஷயத்தை நம் சமூகத்துக்கு சொல்லும் என்றார்.

  Published by:Murugadoss C
  First published: