விஷ்ணு விஷால் நடித்திருக்கும் எஃப் ஐ ஆர் படத்தின் புரோமோ பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். தற்போது இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.
தனது நண்பர்களுக்கு, நண்பர்களாக இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு தொடர்ச்சியாக படங்களில் பாடி வருகிறார் சிம்பு. விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படம் எஃப்ஐஆர் படத்துக்கும் ஒரு பாடல் பாடி தந்துள்ளார். பிப்ரவரி 11ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. நேற்று இந்த புரோமோ பாடலை வெளியிட்டனர்.
எஃப் ஐ ஆர் படத்தில் விஷ்ணு விஷால் அபூபக்கர் அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞனாக நடித்துள்ளார். தவறுதலாக தீவிரவாதியாக குற்றம் சாட்டப்படும் இவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் இந்தப் படத்தின் கதை. காலங்காலமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வரும் நிலையில் இப்போதுதான் முஸ்லிம்களின் கோணத்தில் தமிழ் திரையுலகம் சிந்திக்க ஆரம்பித்துள்ளது. முக்கியமாக சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநாடு திரைப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முஸ்லீம்களை நீண்ட காலத்திற்குப் பிறகு நேர்மறையாக சித்தரித்திருந்த திரைப்படம் இது.
எஃப் ஐ ஆர் படத்திற்கு அஸ்வத் இசை அமைத்துள்ளார். "சிம்புவின் படங்களை பார்த்து வளர்ந்த எனக்கு அவர் பாடப் போகிறார் என்றதும் பதட்டமானது. ஆனால் சிம்பு ரொம்பவும் சகஜமாக பேசி என்னுடைய பதட்டத்தை இல்லாமல் செய்தார்" என அஸ்வத் கூறியிருக்கிறார். இந்த புரோமோ பாடலை கருணாகரன் எழுதியுள்ளார். பாடலில் வரும் ராப் பகுதியை எழுதி பாடியவர் கிறிஸ்டோபர் ஸ்டான்லி.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் மனு ஆனந்த் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அப்படி சிம்புவுடன் ஏற்கனவே பழக்கமானவர் அவர் சிம்புவை அணுகி புரோமோ பாடலை பாடித் தர வேண்டும் என்று கேட்க சிம்புவும் மறுக்காமல் பாடி தந்துள்ளார்.
எஃப்ஐஆர் திரைப்படம் 11ஆம் தேதி தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகிறது. படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில் தெலுங்கிலும் ரவி தேஜா, நானி போன்றவர்கள் படம் குறித்த நேர்மையான விமர்சனங்களை முன் வைத்திருப்பது தெலுங்கிலும் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.