புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நடிகர் தவசிக்கு சிம்பு ரூ.1 லட்சம் நிதியுதவி..

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நடிகர் தவசிக்கு சிம்பு ரூ.1 லட்சம் நிதியுதவி..

சிம்பு | தவசி

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு சிம்பு ரூ.1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

  • Share this:
சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த குரலில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ 140-க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர மற்றும் துணை நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார் தவசி.

தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எலும்பும் தோலுமாக சமீபத்தில் வெளியான தவசியின் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் தமிழ் சினிமா நடிகர்களிடம் உதவி கேட்டு உருக்கமான கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து மருத்துவரும், திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன், மருத்துவ செலவுகள் அனைத்தையும் சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து நடிகர் சூரி 20000 ரூபாயும், சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் 25000 ரூபாயும் நிதி உதவி செய்தனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி சவுந்தர்ராஜா மூலம் தவசிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கினார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தவசியை நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க:  ‘ஹேப்பி பர்த்டே தங்கமே’ - விக்னேஷ் சிவன் வாழ்த்து - நயன்தாராவின் க்யூடெஸ்ட் புகைப்படங்கள்..

இந்நிலையில் நடிகர் சிம்பு தவசிக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலம் சிம்பு இந்த உதவியை செய்துள்ளார். தவசி உதவி கோரியிருந்த நிலையில் அவருக்கு நடிகர்கள் பலரும் தொடர்ச்சியாக உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: